இந்தியா ஒரு தன்னிறைவு பெற்ற, இறையாண்மை மிக்க நாடு. அது அந்நியநாடுகளின் தொண்டுகளையோ, உதவிகளையோ ஏற்கத் தேவையில்லை.  மற்றும் “மதிய உணவு ஒருபோதும் இலவசமாக கிடைப்பதில்லை” என்ற ஒரு அமெரிக்க சொல் வழக்கப்படி, அந்நிய நாட்டு உதவி மற்றும் தொண்டுகள் ஒருபோதும் இலவசம் கிடையாது. அவை நம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அதனை புரட்டிப்போடும் வல்லமை பெற்றவை. மக்களமைப்பு விகிதாச்சாரங்களில் மாற்றம் கொண்டுவந்து, நாட்டை துண்டாட முனைபவை. சமுதாய நல்லிணக்கத்தை கெடுத்து, அவற்றினிடையே பூசல்களைத் தூண்ட முனைபவை. நாட்டின் சமூக, பொருளாதார, தொழில் முன்னேற்றங்களில் தடைகற்களாக நிற்பவை.  மக்களறிவில் தாக்கத்தை ஏற்படுத்தி அந்நியர்களின் வஞ்சக எண்ணங்களுக்கு அவர்களை இழுப்பவை. அந்நிய பொருளுதவிகளால் வரும் இத்தகைய கேடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தாங்கள் வணிக சார்பில்லாத, லாப நோக்கற்ற அமைப்புக்கள் என கூறிக்கொள்ளும் அமைப்புகளுக்கே, பெரும்பான்மையான அந்நிய நிதி வருகிறது. இந்நிதி பெரும்பாலும் அந்நாட்டு அரசு சார்ந்ததாகவோ அல்லது அந்நாட்டிலேயே இருந்து கொண்டு,  ஆனால் அந்நாட்டுச் சட்டங்களை மதிக்காத கும்பல்களைச்  சார்ந்ததாகவோ இருக்கும். இத்தகைய நிதிகள் சில ஆட்சியாளர்கள்,  மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நீதியாளர்களின் மீது அசாதாரணமாக தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது வெளிப்படை.  மனிதநேயப்பார்வை அல்லது சமூக பிரக்ஞை  என்ற போர்வையுடன் வரும் இத்தகைய தாக்கங்கள் இந்திய குடியரசின் மீதும் தேசீய வாதத்தின் மீதும் விடுக்கப்பட்ட சவால்.  அவை நாட்டை புரட்டிப்போடும் ஆயுதங்கள். நாங்கள் ஒரு சமுதாயத்தின் காவலர் எனக்கூறிக் கொள்ளும் சிலர் அதற்கான நிதியை அச்சமுதாயத்திலிருந்தே திரட்ட முடியாமல்,  அந்நிய சக்திகளிடமிருந்து உதவி என்ற பெயரால் பெறுகின்றனர். ரகசியமாகவும், வெளிப்படையாகவும் வரும் இந்நிதிகளைக் கொண்டு அவர்கள் சமுதாயத்தை நிலைகுலையச் செய்து, அவர்களை அந்நிய முதலாளிகளின் வஞ்சக எண்ணங்களுக்கு இரையாக்குகிறார்கள்.  கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ தகவல்,  ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. பொருளுதவி என்ற பெயரால் வரும் அந்நிய நிதி நாளுக்கு நாள் வளர்ந்தே வருகிறது. மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கட்டும்,  தற்போதைய அரசு எவ்வளவு தீவிரமாக கண்காணிக்கட்டும்,  இந்த அந்நிய பொருளுதவி நாட்டுக்குள் வருவது நிற்கவுமில்லை,  தணியவுமில்லை. அது மென்மேலும் வளர்ந்தே வருகிறது. இதனால் நம்நாட்டு விவகாரங்களில் அந்நிய சக்திகளின் தலையீடு உயர்ந்திருக்கிறது.

# வருடம் வெளிநாட்டிலிருந்து வந்த பணம் குறிப்பு
1 2010-11 ₹ 10,865 கோடிகள் MHA L. No. II/21011/58(974)/2017-FCRA-MU dated 07-11-2017 in reply to RTI application
2 2011-12 ₹ 11,935 கோடிகள்
3 2012-13 ₹ 12,614 கோடிகள்
4 2013-14 ₹ 14,853 கோடிகள்
5 2014-15 ₹ 15,297 கோடிகள்
6 2015-16 ₹ 17,765 கோடிகள்
7 2016-17 ₹ 18,065 கோடிகள் PIB Press Release dated 1st June 2018 of MHA

நாம் எப்பொழுதும், இயற்கை பேரிடர் காலங்கள் உட்பட, அந்நிய உதவிகளை பெருமிதத்துடன் நிராகாரித்தே வந்துள்ளோம். இதே போல் நாட்டை துண்டாடும் வஞ்சக எண்ணங்களுடன் வரும் அந்நிய பொருளுதவிகளையும் நிராகாரிக்க வேண்டும். நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு தேவைகளுக்காவும், மதம் மற்றும் தொண்டுதவி செயல்களுக்கும், உள்நாட்டு பரப்புரைகளுக்கும் தேவையான நிதியை உண்டாக்க நம்மால் முடியும். அதற்கான வல்லமையை நாம் பெற்றுள்ளோம்.

ஆகவே, NGO க்கள் மற்றும் இதர குழுக்கள் மூலமாக வரும் அந்நிய பொருளுதவிகளை நிறுத்துவதே நாட்டின் தலையாய கட்டாயம் ஆகும்.  அந்நிய பொருளுதவியினால் வரும் அச்சுறுத்தல்களை நிறுத்த, அதனை தடை செய்வதே ஒரே வழி. இதர சட்டங்களை எவ்வளவு முயன்று இயற்றினாலும் பலனளிக்காது. அச்சட்டங்களில் உள்ள ஓட்டைகளைக் கொண்டு அந்நியர்கள் இந்திய NGO க்களுக்கு தன் நாசக்கார பொருளுதவிகளை அனுப்புவர். அயல்வாழ் இந்திய மக்கள் நம்நாட்டின் மீது உணர்வுபூர்வமான இணைப்பை கொண்டுள்ளனர். நாம் அவர்களின் பொருளுதவிகளை எப்பொழுதும் போற்றி பெற்றுக் கொண்டுள்ளோம். ஆகையால் இத்தடைச் சட்டத்திலிருந்து, அயல்வாழ் இந்தியர்கள் (OCI) தன் தனி அந்தஸ்த்தில் அளிக்கும் நிதியைப் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கலாம். ஆனால் அத்தகைய நிதி ஒரு நிறுவனத்திற்கு வழிகாலாக இருக்கக்கூடாது. மேலும் அது பாரம்பரிய இந்திய முறை மற்றும் தொன்மையான நூல்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கும், பயிற்றுவிப்பதற்கும்,  பரப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும்.

இதர மனித நேயம் மிக்க OCI அல்லாத அயல் நாட்டினர் “பிரதம மந்திரியின் புனர்வாழ்வு நிதி” க்கு உதவலாம். மேலும் பாரம்பரிய இந்திய முறை மற்றும் தொன்மையான நூல்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கும், பயிற்றுவிக்கவும், பரப்புவதற்கும் நிதி உதவ விருப்பமி;ல்லா OCI-க்களும் பிரதம மந்திரியின் புனர்வாழ்வு நிதிக்கு உதவலாம்.

எனவே, அந்நிய நாட்டு பொருளுதவி (தடை) சட்டத்தை உடனே நிறைவேற்ற இந்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அந்நியநாட்டு பொருளுதவி (கட்டுப்பாடு) சட்டத்தை ரத்து செய்து இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். OCI களின் பொருளுதவிகளைத் தவிர மற்ற அந்நிய நிதிகள் உடனடியாகவும், முழுமையாகவும் நிற்கப்பட வேண்டும். மக்களவையின் எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே இத்தடைச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

மாறாக, ஒரு அவசர சட்டத்தின் மூலம் இத்தடைத் சட்டத்தை கொண்டுவந்து, பின்னர் மக்களவை மூலமாக சட்ட வடிவமாக்கலாம்.

Leave a Reply