நம் அரசியல் சாசனப்படி, இந்தியக் குடியரசு எம்மதத்தினையும் சார்ந்தது அல்ல. அதன் முன் எம்மதமும் சமம். அப்போதைய இந்திய பிரிவினையை கருத்தில் கொண்டு, அரசியல் சாசன விவாதங்களில் இந்திய சிறுபான்மையினருக்கு இவ்வுரிமை வெளிப்படையாக தெரிவித்து உத்திரவாதம் அளிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு வெளிப்படையாக தெரிவித்த இந்த உத்திரவாதம், பெரும்பான்மையினரான இந்துக்களுக்கு மறுப்பது அரசியல் சாசன கர்த்தாக்களின் நோக்கமல்ல. இதனை விவாத துணை உரைகளில் தெளிவாக காணலாம்.
ஆனால் காலப்போக்கில் அரசியல் சாசனம் பிரிவு 26-30-க்குப் புது அர்த்தம் கற்பிக்கப்பட்டு, அது திரிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கே மதச்சமத்துவ உரிமை உண்டு பெரும்பான்மையினருக்குக் கிடையாது என்ற மாயை உருவாகப்பட்டது. இது பெரும்பான்மையினரிடம் ஒரு மதப்பாகுபாட்டை விதைத்தது. நிஜமோ அல்லது நம்பிக்கையோ, பெரும்பான்மையோ, சிறுபான்மையோ மக்களின் ஒரு பிரிவு தாங்கள் தங்கள் தேசத்தினால் வஞ்சிக்கபடுகிறோம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால், அது அந்த தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கும்.
மறைந்த திரு. சையது ஷஹாபுதீன் அவர்கள் இதனை உணர்ந்தார். மக்களவை தனிநபர் மசோதா நெ: 36 – 1995 படி அரசியல் சாசனம் பிரிவு 30 முழுமை பெற அவர் முனைந்தார். எந்த மதத்தினருக்கும், எந்த சமுதாயத்தினருக்கும் மதச்சமத்துவ உரிமை உண்டு. ஆகையால் இந்த பிரிவில் ‘சிறுபான்மையினர்’ என்ற பதத்திற்கு பதிலாக ‘எல்லா சமுதாய மக்களுக்கும்’ என்ற பதம் இடம் பெற வேண்டும் என அவர் வாதிட்டார்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், மதச்சார்பில்லாத மதச்சமத்துவ உரிமை மீண்டும் நிலை நிறுத்தப்பட வேண்டும். எதேச்சாதிகார கொள்கை மூலம் இந்துக்கள் மீது திணிக்கப்பட்ட மதப்பாகுபாடு களையப்பட வேண்டும். அரசியல் சாசன பிரிவு 26-30 உடனடியாக சட்டத்திருத்தம் வாயிலாக திருத்தப்பட வேண்டும். இதுவே இந்துக்களுக்கு மதச்சுதந்திரம் மற்றும், மதச்சமத்துவத்தை வழங்கி அவர்களுக்கு சட்டதின்முன் யாவரும் சமம் என்ற நிம்மதியை தரும். அவர்கள் இதன் மூலமாக கீழ்கண்ட உரிமைகளை மீட்டெடுக்க ஏதுவாக இருக்கும்:
- இந்து அறநிலையங்ககளின் மேலாண்மை (கோவில்கள் மற்றும் மானியங்கள்)
- அரசுகள் அறிவிக்கும் நலத்திட்டங்கள் மற்றும் உதவித் தொகைகளுக்குத் தகுதி பெறுதல்
- பாரம்பரிய இந்திய முறைகளையும், தொன்மையான நூல்களையும் கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்க வகை செய்தல்
- அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளின் மிகையான குறுக்கீடு இல்லாதவாறு தெரிந்தெடுத்த கல்வி நிறுவனங்களை தோற்றுவித்தல் மற்றும் நிர்வாகம் செய்தல்
இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் Dr.சத்யபால்சிங் மக்களவையில் ஒரு தனிநபர் மசோதா கொண்டு வந்தார். அரசியல் சாசனப் பிரிவு 26 முதல் 30 வரை திருத்தம் இந்த மசோதா (எண்.226-2016) கோரிக்கை வைத்தது. இக்கோரிக்கை எந்த ஒரு சமூகம் அல்லது குழுவின் உரிமைகளையும் பறிக்க முற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, சிறுபான்மை சமூகத்திற்கே கிடைக்கப் பெற்று, இந்துக்களுக்கு மறுக்கப்பட்ட மதசுதந்திரத்தையும் சம உரிமைகளையும் பேணிப் பாதுகாத்து மத நல்லிணக்கத்திற்கு வகை செய்கிறது. சட்டத்தின்முன் யாவரும் சமம் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது.
Dr.சத்யபால்சிங் அவர்களின் தனிநபர் மசோதாவும் (எண்.226-2016 – மக்களவை) (ii) திரு.சையத் ஷஹாபுதீன் அவர்களின் தனிநபர் மசோதாவும் (எண்.36-1995 – மக்களவை) நகல் இணைப்பு – II & III ஆக தங்களின் உடனடி கவனத்திற்காக இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.
I support.
Today the majority hindus have been duped into a fake secularism, leading to their own destruction in their homeland. I think this petition would be the beginning of course correction