பிரிவு 370 என்பதே காஷ்மீர் கிளர்ச்சிகளுக்கு மூலகாரணம் என்று பிஜேபி சரியாக கணித்தது. மேலும் அதுவே நாட்டின் ஒருங்கிணைப்பிற்கும் ஒரு தடைகல் என்றும் உணர்ந்தது. ஆதனாலேயே பிரிவு 370-ஐ அரசியல் சாசனத்திலிருந்து நீக்க தொடர்ந்து அக்கட்சி குரல் கொடுத்து வந்தது. இதன் தேர்தல் அறிக்கை 2014-லிலும் இதனை அக்கட்சி ஒரு உறுதிப்பாடாக அறிவித்தது. பிரிவு 370-ஐ நீக்கினாலொழிய காஷ்மீர் பிரச்சினை தீராது.

ஒருதலைப்பட்சமாக வறையறுக்கப்பட்ட தொகுதிகளாலும், பிரிவு 370-னாலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு எப்பொழுதும் ஒரு தேர்தல் ஆதிக்கத்தை அடைந்தே வந்திருக்கிறது. இம்மாநிலத்தின் பெரும்பாலான முதன்மந்திரிகள் காஷ்மீர் பகுதியை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இதனால் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் அலட்சியப்படுத்தப்பட்டன/படுகின்றன. மற்றும், இம்மூன்று பகுதிகளின் கலாச்சாரங்களும் வெவ்வேறானவை. இதனாலேயே லடாக், மற்றும் ஜம்மு பகுதிகளின் கலாச்சாரங்கள் சிதையுறுமோ, அழிவுறுமோ, ஆக்கிரமிப்புக்கு ஆளாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர் பிராம்மணர்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்களும், ஆக்கிரமிப்புகளும் இவ்வச்சத்தை அதிகப்படுத்துகிறன. எனவே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிப்பதே உடனடி தேவையும், தலையாயக் கட்டாயமும் ஆகும், இதனாலேயே ஜம்மு, லடாக் பகுதிகள் தங்கள் மக்கள் விகிதாச்சார மாறுதலிருந்து தப்பிக்க முடியும். அவர்களின் மதக்கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் காப்பாற்றப்படும்.

காஷ்மீர் இந்துக்கள் மீது நடந்த கொலை வெறித் தாக்குதல் மீண்டும் நிகழாதிருக்க நாங்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை வைக்கிறோம்:

  1. அரசியல் சாசனம் பிரிவு 370-ஐ திரும்பிப் பெறுதல், அரசியல் சாசனம் உத்தரவு, 1956-வை (J & K விற்கு மாத்திரம்) நீக்குதல் மற்றும் இவ்வாணை அரசியல் சாசனத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும், (உதாரணமாக பிரிவு 35A) நீக்கி சரி செய்ய வேண்டும். இவையனைத்தும் பிஜேபி தன் தேர்தல் அறிக்கை 2014 ல் கொடுத்த வாக்குறுதிகள்.
  2. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மூன்று மாநிலங்களாகவோ, யூனியன் பிரதேசங்களாகவோ பிரித்தல். இது அம்மாநிலத்தை காஷ்மீர், ஜம்மு மற்றும் லடாக் என்ற மூன்று பகுதிகளாக பிரிக்கும்.
  3. காஷ்மீர் இந்துக்களுக்கு “உள்நாட்டில் புலம் பெயர்ந்த மக்கள்” என்ற அந்தஸ்து கொடுத்து அதற்குண்டான உதவிகளை செய்தல். இந்த அந்தஸ்து அவர்கள் மீண்டும் தன் சொந்த பகுதிகளுக்கு திரும்பும் வரை தொடர வேண்டும்.

Leave a Reply