ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள் நாசப்படுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளன. இன்னும் பல கோவில்கள் சிதிலமடைந்து, பயன்பாட்டுக்கு உரிய இடமாக இல்லாமல் இருக்கின்றன. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றைக்குக் அவை வழிபட முடியாமல் பாழ்பட்டு நிற்கின்றன. அதனால், இந்திய மற்றும் மாநில தொல்லியல் துறை கட்டுப்பாட்டினுள் உள்ள கோவில்கள் உட்பட, சிதிலமடைந்து, நாசப்பட்டு மற்றும் இடிபாடுகளாய் இருக்கும் அனைத்து இந்துக் கோவில்களும், பழையபடி மறுசீரமைப்பு செய்யப்பட்டு அவையனைத்திலும் செவ்வனே வழிபாடு நடக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

மேலும், நம்முடைய சனாதன தர்மத்தை தொடர்ந்து பாதுகாத்து, பரப்பி வரும் நமது பாரம்பரிய சொத்துக்களான, வேத பாடசாலைகள், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை வடிவங்கள், இலக்கியம், நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை முதலியன, போதிய ஆதரவு இல்லாததாலும், கலை வித்தகர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்வாதாரமே இல்லாத நிலையினாலும், அவை மெல்ல அழிந்து வருகின்றன. நம்முடை நாகரீகத்தின் அடித்தளமே சனாதன தர்மம் தான் என்றால் அது மிகையாகாது. நாம் இச்சனாதன தர்மத்தைப் போற்றிப் பாதுகாத்து,  வளர்க்கவில்லையெனில், உலகின் மிகப்பழமையான நம் நாகரீகம் விரைவில் அழிபடும். அப்படி நடந்தால், “சுதந்திர இந்தியாவில்” வாழும் இந்துக்களாகிய நாம் மட்டுமே அதற்க்கு முழுப் பொறுப்பாக இருக்க முடியும்..

பாஜக-வின் 2014-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் “பாரம்பரிய இடங்கள்” என்னும் தலைப்பில் “இந்தியாவை ஒரு உறுதியான நாகரீகத்தின் அடித்தளத்தில் உருவாக்குவோம்” என்னும் மாறாத குறிக்கோளின் அடிப்படையில், நாம் அரசாங்கத்திடம் வேண்டுவது, ‘இந்து கலாச்சார மறுசீரமைப்பு நிறுவனம்’ என்னும் ஒரு அமைப்பை மத்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமாக அமைக்க வேண்டும். அதன் ஆரம்ப முதலீடு குறைந்த பட்சம் ₹10,000 கோடியாக இருந்து, இதே அளவு வருடாந்திர மானியமும் ஓதுக்கப்பட வேண்டும். அதன் முக்கியப் பணிகள், நாசப்படுத்தப்பட்டு, பாழ்பட்டு, சிதிலமடைந்து, இடிபாடுகளாய் நிற்கும் அனைத்துக் கோவில்களின் மறுசீரமைப்பு; வேத பாடசாலைகள், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை வடிவங்கள். இலக்கியம், நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை முதலியனவற்றின் பாதுகாகாப்பு,  ஆதரவு, பரப்புதல் முதலியனவாக இருக்க வேண்டும். மேலும்,இச்செயல்கள் பாரம்பரிய கலைகளில் பலருக்கு வேலை வாய்ப்பும் வாழ்வாதாரமும் அளிக்கும்.

Leave a Reply