கால்நடையின் முக்கியத்துவம் மதத்தைத் தாண்டியது, ஏனெனில் கிராமப் பொருளாதாரத்தில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இறைச்சி/மாட்டிறைச்சி ஏற்றுமதியில் மிகப்பெரிய ஏற்றம் இருப்பதால், 2017-18-ஆம் ஆண்டில் சுமார் 14 லட்சம் டன் ஏற்றுமதி செய்து மாபெரும் ஏற்றுமதியாளர் என்னும் வேண்டாத பெயரை சம்பாதித்து இருக்கிறோம். மத்திய அரசாங்கம் இறைச்சி/மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு பெரிய அளவில் ஊக்கம் அளிப்பதால், உள்ளூரில் இறைச்சி/மாட்டிறைச்சியின் விலை அசாதாரணமாக ஏறியுள்ளது. இது, இறைச்சி/மாட்டிறைச்சி மாஃபியா கும்பல்களின் அதிகரிப்புக்கு காரணம் ஆக இருப்பதுடன், கால்நடைகளைத் திருடுவது, அதிக அளவில் வேறு இடத்துக்குக் கொண்டு செல்வது, சட்டத்திற்கு புறம்பாக அவைகளை வெட்டுவது, பக்கத்து நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது போன்ற குற்றங்களும் மிக அதிகரிக்க  காரணாகவும் உள்ளன. இதில், 29 மாநிலங்களில் 20 மாநிலங்கள் பசுக்கள் மற்றும் / அல்லது மாட்டினங்களை வெட்டுவதை தடை செய்து சட்டங்கள் இயற்றியிருக்கும்போதே இந்த நிலைமை.

மாநில அரசாங்கங்கள் இந்த இறைச்சி/மாட்டிறைச்சி மாஃபியாவைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியுற்றதால், உள்ளூர் சமுதாயங்கள் இதை எதிர்க்கக் கிளம்பியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. தவிரவும் கால்நடைகளுக்கு, குறிப்பாக பசுக்களுக்கு, மத சம்பந்தமான உணர்வுகள் வேறு இருக்கின்றன. இந்த எதிர்ப்புகள் சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்கு வழி வகுக்கின்றன. பணபலமும் ஆள்பலமும் கொண்ட மாஃபியாவின் தூண்டுதலின்பேரில், இவை கொலைவெறித் தாக்குதல் என்று தவறாக சித்தரிக்கப்படுகின்றன. இவை, இந்த நாட்டின் மற்றும் அரசாங்கத்தின் பெயரைக் கெடுக்கின்றன. மற்றும் இத்தகைய தவறான பிரச்சாரத்தின் தாக்கமாக உச்ச நீதிமன்றம், அரசாங்கத்தை கொலைவெறித் தாக்குதலைத் தடுக்க சட்டம் இயற்றச் சொல்கிறது. இந்த விரும்பத்தகாத விஷயத்திற்கு இந்திய அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனெனில்:

(1) முதலில், அரசியல் சாசனத்தின் 48-ஆம் பிரிவுக்கு நேர் எதிராக மத்திய அரசாங்கம் பல்வேறு சலுகைகளைக் கொடுத்து, மாட்டிறைச்சி/இறைச்சியின் ஏற்றுமதியை ஊக்குவித்தது.. அதன் விளைவாக  உலகின் மிகப்பெரிய இறைச்சி/மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் என்னும் அவப்பெயர் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

(2) இரண்டாவது, இறைச்சி/மாட்டிறைச்சிக்கும் கால்நடைகளை கடத்தும் மாஃபியாவுக்கும் எதிராக நடவடிக்கைகள் எதுவும் எடுக்க மாநில அரசாங்கங்கள் தவறியது.

ஆகையால், இறைச்சி/மாட்டிறைச்சி மாஃபியாவின் அராஜகச் செயல்களால் எழும் சமூகப் பிரச்சினைகளையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் தவிர்க்க, உடனடியாக இறைச்சி/மாட்டிறைச்சி ஏற்றுமதியை முழுமையாகத் தடை செய்யவேண்டும்., அரசியல் சாசனத்தின் 48-வது பிரிவை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமையாகிறது. மேலும் விவசாயக் கால்நடைகளைப் பராமரிப்பதும், பாரம்பிரீயக் காளையினதை பாதுகாப்பதும் அரசு நமது நாகரீகத்திற்கு ஆற்றும் கடமையுமாகும்.

ஆதலால், மத்திய அரசாங்கத்தை நாங்கள் வேண்டிக்கொள்வது, கீழ்க்-கண்ட-வைகளின் உடனடி நடவடிக்கை:

(1) கால்நடைகள், மாட்டிறைச்சி, இறைச்சி மற்றும் அதன் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்;

(2) “விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சட்டம், 1985-ஐ” திருத்தம் செய்து, அதில் உள்ள “இறைச்சி, இறைச்சிப் பொருட்கள் மற்றும் வெட்டும் இடங்கள்” என்னும் வார்த்தைகளை நீக்கிவிட வேண்டும்;

(3) பாரதீய ஜனதாக் கட்சியின் 2014 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி. அனைத்து இந்தியாவிற்கும் பொருந்தும் விவசாயக் கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். இதற்கு அனைத்து மாநில சட்டங்களையும் ரத்து செய்யும் அதிகாரம் வேண்டும். இது சத்தீஸ்கர் விவசாயக் கால்நடைகள் பராமரிப்புச் சட்டம், 2004-இன் அடிப்படையிலும், அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையில் உள்ள பொது அதிகாரப் பட்டியலின் 17-வதின் படியும் இருக்க வேண்டும்.

எதிர்வரும் மக்களவை கூட்டத் தொடரிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். மாறாக, பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை, ஒரு அவசரப் பிரகடனத்தை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.