பற்பல நாடுகளில் வாழும் இந்துக்களும், ஜைனம், பௌத்தம் மற்றும் சீக்கியர்களும் அவர்கள் சார்ந்த மதங்களின்பால் துன்பப்படுவதே நிதர்சனமான உண்மை. அது துரதிருஷ்டமானதும் கூட. இத்தகைய மதங்களின் தாயகம் இந்தியா என்பதால் அத்தகைய அயல்நாடு வாழ் மக்கள் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். சிலர் தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஆனால் இப்படி இந்தியாவிற்கு தப்பிவந்து தஞ்சம் அடைந்த இம்மக்களின் கதி என்னவென்றால் அவர்கள் இன்றளவும் இந்தியாவின் வெவ்வேறு அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு  இந்தியக் குடியுரிமைக்கு ஏங்குவதே. இத்தகைய நிலையில் அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கும் திரும்பமுடியாது. திரும்பினாலும் அவர்கள் தங்கள் உயிரையோ இல்லது மதத்தினையோ இழக்கவேண்டியது இருக்கும்.

இந்தியா இம்மதங்களின் ஊற்றுக் கண்ணாக இருந்தது. அம்மதங்களின் அயல்நாடு வாழ் மக்கள் துன்புறும் போது இந்தியா அவர்களை அரவணைப்பது ஒரு தார்மீகக் கடமை. ஆனால் இதுநாள்வரை தன் கடமையிலிருந்து இந்தியா வழுவியே வந்திருக்கிறது. இம்மக்கள் அயல்நாடுகளில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் போதோ, மற்ற துன்பங்களை அனுபவிக்கும் போதோ இந்தியா தன் கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இவர்களின் பாதுகாப்பு தன் நாகரீகம் சார்ந்த கடமை என்று ஏனோ இந்தியத் தலைவர்கள் மறந்து விட்டனர். இத்தகைய கொலை வெறி தாக்குதல்களால் காரணமாக நம் அண்டை நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் பலர் மாண்டதும், காணாமல் போனதும் கூட நம் தலைவர்களின் உள்ளுணர்வை தட்டி எழுப்பவில்லை. இது நம் மனிதநேயத்தை பற்றியும்,  அரசாங்க விவகாரங்களின் நிலை பற்றியும் நம்மை நிறையவே சிந்திக்க வைக்கிறது. அயல்நாடு வாழ் இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களின் துயர்துடைக்க இதுவே தக்க தருணம். சட்ட வடிவு வாயிலாகவும் கொள்கை வாயிலாகவும் இந்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தன் தார்மீகக் கடமையாற்ற வேண்டும்.

“அயல்நாடு வாழ் இந்துக்களுக்கு, அவர்கள் துன்பப்படும் வேளையில் இந்தியாதான் ஒரு இயற்கையான தாயகமாக இருக்கமுடியும்” என்று பிஜேபி தேர்தல் அறிக்கை – 2014 ல் அறிவித்திருந்தது. இது தொடர்பாக இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் வேண்டி மத்திய அரசு 2016 மக்களவை தொடரில் ஒரு மசோதாவை சமர்ப்பித்தது. இது தேர்வுக்குழுவின் பார்வையில் தற்போது இருக்கிறது. இந்த மசோதாவில் சில குறைபாடுகள் இருக்கின்றன. முதலில் இம்மசோதா ஆப்கானிஸ்தானம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கே பொருந்துகிறது. இந்தியாவை தாயகமாக கொண்ட மற்ற மதங்களுக்கும், அம்மதங்களை சேர்ந்த மற்ற அயல்நாடு வாழ் மக்களுக்கும் இது பொருந்தும்படி இருக்கவேண்டும். இரண்டாவதாக கிருத்துவர்களை இம்மசோதாவில் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் அம்மதத்தின் தாயகம், மற்ற இந்து, பௌத்த, ஜைன, சீக்கிய மதங்களைப் போன்று, இந்தியா அல்ல. மற்றும் நூற்றுக்கும் மேலான கிருத்துவ நாடுகள் உலகில் உள்ளன. அவர்கள் ஏதாவது ஒரு நாட்டில் தஞ்சம்  கோரலாம்.

மூன்றாவதாக அரசியல் சாசன சட்ட ஏற்பு இல்லாத நிலையில் இம்மசோதா சட்டமாக்கப்பட்டாலும்,  அதனை ஆட்சேபித்து நீதிமன்றங்களை எவரும் நாடலாம் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். இது ஏறக்குறைய நிதர்சனமும் கூட. எனவே அரசியல் சாசன சட்ட ஏற்பு பெறும் வகையில் உட்செருகல் கொண்டு வந்து,  பிறகே இச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். நான்காவதாக, வடகிழக்கு மாநிலங்கள் இம்மசோதாவை எதிர்க்கின்றனர். இம்மசோதா சட்டமானால் எதிர்வரும் பாராளுமன்றத் தொடரில், அயல்நாடு வாழ் மக்கள் வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களிலேயே குடியமர்த்தப்படுவர் என்ற உத்திரவாதத்தை மத்திய அரசு அவர்களுக்குக் கொடுத்து,  அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். தற்போது உள்ள வடிவில் இம்மசோதா சட்டமானால் தேவையில்லாத குழப்பங்களையும், வழக்குகளையும் நாடு சந்திக்க வேண்டி வரும். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இதர நாடுகளில் துயர்படும் லட்சக்கணக்கான இந்து, பொளத்த அகதிகளுக்கு இந்நிலை ஒருபோதும் துணை போகாது.

எனவே உடனடியாக அரசியல் சாஸனத்தில் Art II-A-ஐ உட்செருகலாக கொண்டு வந்து, பிறகு குடியுரிமைச் சட்டம், 1955-ஐ மாற்றியமைக்க வேண்டும். இதுவே புலம் பெயர்ந்த இந்து, பொளத்தம், ஜைனம் மற்றும் சீக்கியர்கள் தம் மதங்களின்  தாயகமான இந்தியாவிற்கு திரும்ப வழி வகுக்கும். இந்த புதிய Art II-A-யின் நோக்கமே இத்தகைய மக்கள் அவர்கள் இந்து, பொளத்தம்,ஜைனம் மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்தவர்களாகவும், இதனால் அவர்கள் அயல் நாடுகளில் துன்பங்களை அனுபவிப்பதேயாகும். அவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற பிறகு இந்திய தாயகமில்லா வேறொரு மதத்துக்கு மாறினால் அவர்கள் குடியுரிமை பறிபோகும் ஒரு நிபந்தனையை சேர்க்க வேண்டும். இப்படி மாற நினைப்பவர்கள் தங்கள் மதம் மீது ஒரு பிடிப்பு இல்லாதவர்கள். மேலும் இந்தியத் தாயகம் இல்லா வேற்று மதங்களுக்கு தாவ அவர்கள் நினைத்திருந்தால், அதனை தான் முன்பிருந்த நாட்டிலேயே செய்திருக்க முடியும். இந்தியாவிற்கு வந்துதான் இதை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் இவர்களின் இத்தகைய செயல் இந்தியாவை கேலி செய்வதற்க்கு ஒப்பாகும். இந்திய குடியுரிமையை போலியாக பெற இது வழிகோலுவதாக அமையும்.

அதனால் நாங்கள் வேண்டுவதெல்லாம் (i) நிலுவையிலுள்ள குடியுரிமை (திருத்தம்) 2016 மசோதாவை திரும்ப பெறுதல் (ii) Art II-A-யை நுழைக்கும்படி அரசியல் சாஸனத்தை திருத்துவது. (iii) புதிய குடியுரிமை (திருத்தம்) மசோதா, 2018-ஐ அறிமுகப்படுத்தும்படி குடியுரிமை சட்டம் 1955-ஐ திருத்துதல் (மேலே சுட்டிக் காட்டப்பட்ட பொருட்களை கருத்தில் கொண்டு). இத்தகைய மாற்றங்கள் எதிர்வரும் மக்களவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுமாறுக் கோருகிறோம்.

Art II-A: “அரசியல் சாசனத்தில் இதுபற்றிய கருத்துக்கள் இல்லாத நிலையில், இந்திய தாயகத்தைக் கொண்ட இந்து, பொளத்த, ஜைன மற்றும் சீக்கிய மத அயல்நாடு வாழ் மக்களின் மதம் சார்ந்த துன்பநிலையைக் கருதி, இந்திய மக்களவை அவர்கள் எந்நாட்டிலிருந்து இந்தியா திரும்பினாலும் உடனடி இந்திய குடியுரிமை கிடைக்க உறுதி செய்கிறது”.

அத்தகைய குடியுரிமை பெற்றவர்கள், அதன்பின் இந்திய தாயகமில்லா வேற்று மதத்திற்கு எக்காலத்திலாவது மாறினால்:

  • அவர்களின் இந்தியக் குடியுரிமை ரத்தாகும்
  • அவர்களின் பொதுவாழ்க்கை அலுவல் அல்லது அவர்களின் அரசு வேலை பறிபோகும். அவர்கள் வேலையிழப்பார்கள்.
  • அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசின் வசம் எடுத்துக் கொள்ளப்படும்.
  • அவர்கள் மீண்டும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை வாங்க தடை விதிக்கப்படும்.

Leave a Reply