

கோரிக்கைகளின் சுறுக்கம்
கோரிக்கை பட்டியல் - இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை கிடைக்கச்செய்ய முயற்சி
- ஹிந்து சமய விஷயங்களில் சட்டமன்ற மற்றும் நீதிமன்ற தலையீடுகள் பற்றி கலங்கியிருக்கிறீர்களா?
- பசு பாதுகாப்பு விஷயங்களில் தீடீரென்று அதிகரித்துள்ள "கும்பலாக தாக்கிக் கொல்லும் (mob lynching)" சம்பவங்கள் பற்றி திகிலடைந்திருக்கிறீர்களா?
- ஹிந்து சமய விஷயங்களுக்காக நீதிமன்றங்களில் பொது நல வழக்கு தொடரும் சம்பவங்கள் தீடீரென்று அதிகரித்துள்ளது பற்றி ஆச்சரியமடைந்திருக்கிறீர்களா?
நூற்றுக்கும் அதிகமான ஹிந்துக்கள் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சந்தித்து இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினறுக்கு சமமான உரிமைகள் வழ்ங்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்கள். அந்த சந்திப்பின் முடிவாக 8 கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.
- ஹிந்துககளுக்கு அவர்களது மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் சம உரிமைகள் வழஙக வேண்டி டாக்டர். சத்தியபால்சிங் 2016ம் ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த தனிநபர் மசோதவை அமல்படுத்துதல், அதில் கூறியுள்ளபடி,
- வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகம் (கோயில்கள் மற்றும் அறநிலையங்கள்)
- அரசாங்கத்தின் திட்டங்களில் உதவித்தொகை மற்றும் சலுகைகள் பெறும் உரிமை.
- கல்வி நிலையங்களில் இந்திய பாரம்பரிய கல்வி மற்றும் தொன்மையான நூல்களை கற்பித்தல்.
- அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் கல்வி நிலையங்களை நிறுவதற்க்கும் நிர்வகிப்பதற்க்குமான உரிமை.
- எப்சிஆர்ஏ (FCRA Act) சட்டத்தை நீக்குதல் மற்றும் அச்சட்டத்தின் மூலம் அந்நிய நாட்டிலுருந்து வரும் பணத்தை (வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து வரும் பணத்தை தவிர்த்து) முழுவதுமாக தடை செய்தல், இந்தியாவின் நீதித்துறை, சட்டம் மற்றும் கொள்கை இயற்றுதலில் அந்நிய நாட்டு அரசுகளின் தலையீட்டை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வருதல்.
- ஹிந்து மற்றும் இந்தியாவில் தோன்றிய மதங்களின் பண்பாட்டு, கலாச்சார பாரம்பரிய விஷயங்களிலும் கடைபிடிக்கும் முறைகளிலும் பரப்பும் முறைகளிலும் அந்நிய தலையீட்டை தடுப்பதற்க்கு மத சுதந்திர சட்டத்தை அமல்படுத்துதல்.
- அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு மற்றும் 35Aவது பிரிவை நீக்குதல் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு, காஷ்மீர், லடாக் என்ற மூன்று பகுதிகளாக பிரித்தல்.
- இந்தியாவிலுருந்து பசு இறைச்சி ஏற்றுமதிக்கு முழுத்தடை விதித்தல்.
- சிதிலமடைந்த கோயில்கள் மற்றும் புராதன சின்னங்களை புனரமைப்பதற்க்கும், இந்திய கலாச்சாரத்தை ஆதாரமாக கொண்ட கலை, இலக்கியம், நடனம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாப்பதற்க்கும் 10000 கோடி ரூபாயை ஆரம்ப முதலீடாக கொண்ட "ஹைந்தவ ஸம்ஸ்க்ருதி ஜீர்ணோத்தாரன நிகாம்" (ஹிந்து கலாச்சார புனர்நிர்மாண நிறுவனம்) என்ற அமைப்பை மத்திய அரசு சார்ந்த நிறுவனமாக ஏற்படுத்துதல்.
- வெளிநாடுகளிலுருந்து இந்தியாவிற்க்கு அகதிகளாக வந்த இந்தியாவில் தோன்றிய மதங்களை (ஹிந்து, புத்த, சமண மற்றும் சீக்கிய) பின்பற்றும் மக்களூக்கு நிரந்தர குடியுரிமை வழ்ங்கிட வகை செய்யும் விதத்தில் தற்போதய குடியுரிமை சட்டத்திற்க்கான எல்லா திருத்தங்களையும் விலக்கிக்கொண்டு புதிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துதல்.
- எல்லா இந்திய மொழிகளுக்கும் சம வாய்ப்புகளை வழ்ங்குதல்
பின்வரும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் மேற்கண்ட கோரிக்கைகளை விரிவாக படித்து தயவுசெய்து தங்களது கையொப்பமிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
https://equalrightsforhindus.com/hindu-charter-petition/
(இந்த கோரிக்கைகள் அடங்கிய மனு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களிடம் 100000 கையொப்பங்கள் பெற்ற் பின் சமர்பிக்கப்படும், இதற்கு ஆதரவளிக்கும் படியும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் படியும் கேட்டுக்கொள்கிறோம்).
இந்த கோரிக்கைக்குக் கையொப்பம் இடுங்கள்
Sign the Charter of Hindu Demands Petition
Read the petitionபதிவிறக்கங்கள்
Charter for Hindu Demands - Full (Tamil)
Summary of Hindu Charter of Demands (Tamil)
Press Release of the Conference on Hindu Charter (Tamil)
இந்து சமுதாயத்தின் கோரிக்கைகள்
எங்களிடமிருந்து புதிய தகவல்கள்
இந்துசமயக் கோரிக்கைகள் பிரகடனம் பற்றிய மாநாட்டின் செய்தி வெளியீடு
புது டெல்லி, செப்டம்பர் 23, 2018: மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அறிவாளர்கள் மற்றும் கவலைப்படும் குடிமக்கள் என்று பல்வேறு துறைகளைச் […]