புது டெல்லி, செப்டம்பர் 23, 2018:

மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அறிவாளர்கள் மற்றும் கவலைப்படும் குடிமக்கள் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த, நாடு முழுவதிலுமிருந்து சுமார் நூறு பேர் கொண்ட குழு, புது டெல்லியில், செப்டம்பர் 22, 2018 அன்று கூடியது. இந்து சமூகத்தின் மேல் காட்டப்படும் அமைப்பு முறையான பாகுபாட்டைக் கண்டு மிகவும் கவலையுற்றுக் கூடிய இவர்கள், இந்து சமூகத்திற்கு எதிராக உள்ள அரசியல் சாசன, சட்ட ரீதியான மற்றும் பொதுக்கொள்கை பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தார்கள்.

அந்த விவாதத்தின்போது, சனாதன தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய நாகரீகத்தின் வாரிசாகவும், பாதுகாப்பாளராகவும் மற்றும் அறங்காவலராகவும் இருக்கும் இந்திய அரசங்கத்திடம்தான், இந்திய நாகரீகத்தைப் பாதுகாக்கவும் பரப்பிடவும் முழுப் பொறுப்பும் உள்ளது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட கருத்தாக இருந்தது.

இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க, முக்கியமான இந்து கோரிக்கைகள் அடங்கிய ஒரு சாசனம், நீண்ட விவாதத்திற்குப் பின் வரையப்பட்டது. இந்த சாசனம் கோருவது:

  1. இந்திய நாடு, சட்ட ரீதியாகவும், அமைப்பு முறையாகவும் இந்துக்களுக்கு எதிராகக் காட்டும் பாகுபாட்டை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இது, மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து குடிமக்களும் சமம் என்னும் கொள்கைக்கு எதிராக உள்ளது. இந்த விஷயத்தில், டாக்டர் சத்யபால் சிங் அவர்கள் மக்களவையில் கொண்டு வந்த, இன்னும் முடிவெடுக்கப்படாத, தனியார் மசோதா 2016-ஆம் ஆண்டு எண்.226 என்பதை வரும் பாராளுமன்த் தொடரில் நிறைவேற்ற வேண்டும். அதில் அவர் அரசியல் சாசனத்தின் 26 முதல் 30 வரை உள்ள பிரிவுகளில் திருத்தம் செய்ய கோரியிருக்கிறார். இந்த மசோதா, மற்றவர்களுக்கு இணையாக இந்துக்களுக்கும் கீழ்க்கண்ட விஷயங்களில் சமஉரிமை அளிக்கிறது:

(1)  அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் கல்வி நிலையங்களை நடத்துவது;

(2) இந்துக் கோவில்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களின் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை நீக்கி, அவற்றை இந்து சமூகமே மீண்டும் நிர்வகிக்க வழி செய்வது;

(3)  இந்துக்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது மற்றும் பரப்புவது.

மறைந்த சையத் ஷஹாபுதீன் அவர்கள், இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களுக்கு இருந்த, அரசியல் சாசன ரீதியான சில சங்கடங்களைப் புரிந்து கொண்டு, மக்களவையில் 1995-ஆம் ஆண்டே, ஒரு தனியார் மசோதா (எண் 36) கொண்டுவந்ததை இந்தக்குழு நினவு கூறுகிறது. அவரது மசோதாவில், அரசியல் சாசனம் 30-வது பிரிவில், எல்லா சமுதாயங்களையும் பிரிவினர்களையும் உள்ளடக்க வேண்டி, “சிறுபான்மையினர்” என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக “குடிமக்களின் எல்லாப் பிரிவினரும்” என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்றார்.

  1. இந்தியாவில் சில அமைப்புகளுக்கு வெளி நாட்டிலிருந்து பெரிய அளவில் பணம் வருகிறது. அவை பெரும்பாலும் வெளி நாட்டு அரசாங்கங்கள் அல்லது அவர்களது அமைப்புக்களுடன் தொடர்பு உடைய நிறுவனங்களிடமிருந்து வருகின்றன. அதனால், இந்தப் பணம், இந்தியாவில் அந்த நிறுவனங்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டு, இந்திய சமூகத்தை நாசமாக்குவதற்கும், உள்நாட்டுப் பிரச்சினைகளையும் பிரிவினை வாதத்தையும் தூண்டிவிட உதவுகிறது. மத்திய அரசில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் இது நடக்கிறது என்பதை கீழ்க்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மத்திய அரசாங்கம் சட்டங்களை அமல் படுத்த நடவடிக்கைகள் எவ்வளவு எடுத்தாலும், வெளி நாட்டிலிருந்து பணம் வருவது அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. நம்முடைய உள் நாட்டு விவகாரங்களில் வெளி நாட்டினர் தலையீடும் அதிகரிக்கின்றன.
# வருடம் வெளிநாட்டிலிருந்து வந்த பணம் குறிப்பு
1 2010-11 ₹ 10,865 கோடிகள் MHA L. No. II/21011/58(974)/2017-FCRA-MU dated 07-11-2017 in reply to RTI application
2 2011-12 ₹ 11,935 கோடிகள்
3 2012-13 ₹ 12,614 கோடிகள்
4 2013-14 ₹ 14,853 கோடிகள்
5 2014-15 ₹ 15,297 கோடிகள்
6 2015-16 ₹ 17,765 கோடிகள்
7 2016-17 ₹ 18,065 கோடிகள் PIB Press Release dated 1st June 2018 of MHA

இயற்கைப் பேரிடர்கள் வரும்போதுகூட நாம் வெளி நாட்டு நிதியுதவியை மறுப்பது நல்ல விஷயம்தான். ஏனெனில் நமக்கென்று ஒரு தேசீயப் பெருமை உள்ளது மற்றும் உள் நாட்டிலேயே தேவையான நிதியை திரட்ட நம்மால் முடியும். யாரும் வேண்டுமென்றே எதிர்பார்ப்பில்லாமல் இலவசமாக கொடுக்க மாட்டார்கள் மற்றும் நம்முடைய நாடு பிச்சையெடுக்க வேண்டியதில்லை. அப்படி இருக்கும்போது, இந்தக் குழு, எல்லா விதமான வெளி நாட்டுப் பணத்தையும் மத்திய அரசாங்கம் தடை செய்யக் கோருகிறது. வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணத்தை மட்டும் அனுமதிக்கலாம் (அவர்களுக்கு நம் நாட்டின் மீது இருக்கும் உணர்வுபூர்வமான பாசத்தை அங்கீகரிக்க). இப்போது இருக்கும் FCRA சட்டத்தை ரத்து செய்து விட்டு, புதிய வெளிநாட்டு பங்களிப்புகள் (தடை) சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.

  1. இந்துக்களுக்கே உரிய கலாச்சார மற்றும் மதசம்பந்தமான பாரம்பரியங்கள், நடைமுறைகள் மற்றும் சின்னங்களை அரசாங்கம் மட்டுமின்றி மற்றவர்களிடமிருந்தும் வரும் தலையீடுகளிலிருந்து பாதுக்காக உடனடியாக மத்திய அரசாங்கள் மத சுதந்திரம் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்.
  1. காஷ்மீர இந்துக்கள் அனுபவித்த இனப்படுகொலைகளைப் போல மறுபடியும் நிகழாமல் இருக்க, இந்தக் குழு, உடனடியாக;

(1) ஜம்மு&காஷ்மீரை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: காஷ்மீர், லடாக் மற்றும் ஜம்மு;

(2) காஷ்மீரின் பிரச்சினையான 370-வது பிரிவு நீக்கப்படவேண்டும். அதேபோல், அதன்கீழ் வெளியிடப்பட்ட, அரசியல் சாசனம் (ஜம்மு & காஷ்மீருக்குப் பிரயோகம்) ஆணை, 1954 என்பதையும் நீக்கவேண்டும். இதன்மூலம் அரசியல் சாசனத்தில் ஜம்மு&காஷ்மீர் சம்பந்தமாக திருத்தங்கள் செய்யப்பட்டது (35-ஆவது பிரிவு போன்றவை) ஆகியவை விலக்கப்பட்டுவிடும்

  1. 2017-18-ஆம் ஆண்டில் சுமார் 14 லட்சம் டன் இறைச்சி/மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து மாபெரும் ஏற்றுமதியாளர் என்னும் வேண்டாத பெயரை சம்பாதித்து இருக்கிறோம். இது. அரசியல் சாசனத்தின் 48-ஆம் பிரிவுக்கு நேர் எதிரானாது. அதனால், உள்ளூரில் இறைச்சி/மாட்டிறைச்சியின் விலை அசாதாரணமாக ஏறியுள்ளது. மேலும், இது, இறைச்சி/மாட்டிறைச்சி மாஃபியா கும்பல்களின் அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளது. இந்தக்குழு, உடனடியாக எல்லாவிதமான மாட்டிறைச்சி/இறைச்சி ஏற்றுமதியை முழுமையாக தடை செய்ய வேண்டுமென்று கோருகிறது. அப்போது உள்ளூரில் அவற்றின் விலை குறைந்து, உள்ள்ளூர் சந்தையில் அதிகப்படியான அளவும் கிடைக்கும். இதன்மூலம். சுற்றுச்சூழல் பாதிப்புக் குறையும், சமூகப் பிரச்சினைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் இருக்காது.
  2. ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களும் புனிதத் தலங்களும், நாசப்படுத்தப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. அவை சிதிலமடைந்து, பயன்பாட்டுக்கு உரிய இடமாக இல்லாமல் இருக்கின்றன. மேலும், நம்முடைய சனாதன தர்மத்தை தொடர்ந்து பாதுகாத்து, பரப்பி வரும் நமது பாரம்பரிய சொத்துக்களான, வேத பாடசாலைகள், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை வடிவங்கள். இலக்கியம், நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை முதலியன போன்றவை, போதிய ஆதரவு இல்லாததாலும், அந்த வல்லுனர்களுக்கு வாழ்வாதாரமே இல்லாத நிலையிலும், அவை மெல்ல அழிந்து வருகின்றன. ஆகையால், இந்தக்குழு, அரசாங்கத்தின் நாகரீக பாதுகாப்பு பொறுப்பை நினைவுபடுத்தும் அதே நேரத்தில், நம் அரசாங்கத்திடம் வலியுறுத்துவது, இந்து கலாச்சார மறுசீரமைப்பு நிறுவனம் என்னும் ஒரு அமைப்பை மத்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமாக அமைக்க வேண்டும். அதன் ஆரம்ப முதலீடு குறைந்த பட்சம் ₹10,000 கோடியாக இருந்து, இதே அளவு வருடாந்திர மானியமும் இருக்க வேண்டும். அதன் முக்கியப் பணிகளின் பட்டயம், நாசப்படுத்தப்பட்டு, பாழ்பட்டு, சிதிலமடைந்து, இடிபாடுகளாய் நிற்கும் அனைத்துக் கோவில்களும் மறுசீரமைக்கப்பட வேண்டும்; வேத பாடசாலைகள், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை வடிவங்கள். இலக்கியம், நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை முதலியன போன்றவை போற்றிப் பாதுகாக்கப்பட்டு, ஆதரவு அளிக்கப்பட்டு, பரப்பப்பட வேண்டும்.
  3. பாஜக, தன்னுடைய 2014 தேர்தல் அறிக்கையில், “இடர்ப்படும் இந்துக்களின் இயற்கையான வீடாக இந்தியா இருக்கும் மற்றும் அவர்கள் இங்கே வந்து அடைக்கலம் புகலாம்” என்று கூறினார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற 2016-ஆம் ஆண்டு மக்களவையில், இந்தியக் குடியுரிமை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய, ஒரு மசோதாவை கொண்டு வந்தார்கள். அந்த மசோதா பாராளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, அங்கேயே அது இருக்கிறது. அந்த மசோத தற்போது உள்ள வடிவில் அரசியல் சாசனப்படி செல்லுமா என்பது முதல் சில பிரச்சினைகள் உள்ளன. இதைத்தவிர, வட கிழக்கு மாநிலங்களும் சில உண்மையான அச்சங்களை கூறியிருக்கிறார்கள். ஆகையால், இந்தக் குழு மத்திய அரசை வலியுறுத்துவது:

(1)  நிலுவையில் இருக்கும் குடியுரிமை (திருத்தம்) மசோதா, 2016-ஐ திரும்பப் பெறுவது;

(2) ஒரு செயலாக்கப் பிரிவு 11-A-ஐ புகுத்தி அரசியல் சாசனத்தைத் திருத்துவது;

(3) பின்னர், குடியுரிமை சட்டம், 1955-ஐ திருத்த, புதிய குடியுரிமை (திருத்தம்) மசோதா,    2018-ஐ வரும் பாராளுமன்ற கூட்ட்த் தொடரில் அறிமுகம் செய்வது.

  1. எல்லா இந்திய மொழிகளுக்கும் சமமான வாய்ப்பளிக்கும் சூழ்நிலையை உருவாக்கி இப்போது உள்ள அமைப்பு முறை பாகுபாட்டை நீக்குவது. இது பொருளாதார மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை ஊக்குவிக்கும். ஏனெனில், இந்திய மக்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தின் மொழிப் பாகுபாட்டால் மேம்பாட்டிலிருந்தும், நீதியிலிருந்தும் விலக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் முக்கிய மனிதர்களால் வரையப்பட்ட இந்த சாசனம், சில குறிப்பிட்ட கோரிக்கைகளையும், கொள்கை ஆலோசனைகளையும் அளித்து, அரசாங்கமும் பாராளுமன்றமும் இந்துக்களுக்கு மற்ற பிரிவினருக்கு உள்ள அதே உரிமைகளை உறுதி செய்ய உதவி செய்யும். சமத்துவம், நீதி மற்றும் சுதந்திரம் ஆகிய கொள்கைகள்தான் ஒரு ஆரோக்கியமான மற்றும் உறுதியான ஜனநாயகத்தை உருவாக்க அவசியம். டாக்டர் அம்பேத்கார் மற்றும் இதர அரசியல் சாசன சிற்பிகள் நினைத்ததுபோல் ஒரு உண்மையான மதச்சார்பற்ற, எம்மதமும் சம்மதம் என்னும் சட்ட ரீதியான ஆளுமையை நாம் உருவாக்க முடியும்.

சுரேந்தரனாத், சென்னை.
டாக்டர் ஹரிதா புராசலா, புது டெல்லி.
டாக்டர் எஷங்கூர் சைகியா, குவாஹாதி.
டாக்டர் பரத் குப்த், புது டெல்லி.
டபன் கோஷ், கொல்கொத்தா.

(இந்தக் குழுவின் சார்பாக)

Leave a Reply