பெறுநர்:
உயர்திரு நரேந்திர மோடி அவர்கள்
மேதகு பாரதப் பிரதமர்

புது தில்லி.

பொருள்: இந்து சமுதாயத்தின் நெடுநாளையக் கோரிக்கைகள் – அரசுகளின் உடனடி கவனத்திற்கு

 1. பாரதம் தழுவிய நாங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் பொதுக்கொள்கைகள் சார்ந்த கணைகள், இந்து மதத்தையும், இந்துக்களையும் குறி வைப்பதை உணர்கிறோம். எங்களின் மதம், கலாச்சாரம் மற்றும் சின்னங்கள் எங்கள் கண்ணெதிரிலேயே சீர்குலைவதையும், கறைபடுவதையும் பற்றி சில காலங்களாகவே நாங்கள் மிகவும் கவலைப் படுகிறோம். இதை பற்றி அலசி ஆராய செப்டம்பர் 22, 2018 அன்று புது தில்லியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்துக்களின் கோரிக்கைகள் ஒரு திட்ட வடிவம் பெற்றது.
 2. கிடைக்கும் அனுபவ ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு அவலநிலை புலப்படுகிறது. இந்திய அரசுகள் இந்துக்களின் பொதுவான இறை நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், வட்டார பழக்கவழக்கங்களையும் ஆதரிக்கத் தவறிவிட்டன. மாறாக அலட்சியம் காட்டவும், சிதைக்கவும் முனைகின்றன. நம் அரசுகளும், நீதிமன்றங்களும் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவுகளுக்கு புது அர்த்தம் கற்பித்து, நடைமுறை சட்டங்களாக ஆக்கியுள்ளன. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25-30-உம் (Article 25-30) இன்ன பிற பிரிவுகளும் இதற்கு சரியான உதாரணங்கள். இவை இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் எதிரானவை மற்றும் தீங்கு விளைவிப்பவை. அரசியலமைப்புச் சட்ட திரிபு காரணமாக, கீழ்கண்ட சட்டங்களும், கொள்கைகளும் நம் மீது திணிக்கபட்டுள்ளன. இவை கீழ்கண்ட வகைகளில் பெரும்பான்மையினரான நமக்கு தீங்கே விளைவிக்கின்றன.
 1.    இந்துக்களுக்கு தங்கள் கல்விக்கூடங்களைத் தாங்களே நிர்வகிக்கும் முழு அதிகாரம் கிடையாது. அரசு அவற்றில் தலையிடும். இச்சட்டம் வேற்று மதத்தினரைக் கட்டுப்படுத்தாது.
 2.    இந்துக்களுக்கு தங்கள் வழிபாட்டுத் தலங்களை, தாங்களாகவே நிர்வகிக்கும் உரிமை கிடையாது. இச்சட்டம் வேற்று மதத்தினரைக் கட்டுப்படுத்தாது
 3.    வேற்று மதத்தினருக்கு வழங்கப்படும நலத்திட்டங்கள் மற்றும் உதவி தொகைகள் இந்துக்களுக்கு மறுக்கப்படுகிறது.
 4.    இந்துசமய வழிபாடு, விழாக்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் அரசுகளால் குறிவைக்கப்பட்டு குறிக்கீடு செய்யப்படுகின்றன.
 5. அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளின் இத்தகைய போக்கு இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் எதிரானவை மற்றும் தீங்கு விளைவிப்பவை. இந்துக்கள் குறி வைத்து கீழ்மை படுத்தப்படுகிறார்கள். மேலும் அரசுகளின் இத்தகைய போக்கு அரசியல்அமைப்புச் சட்டத்திற்கு முரணானது. அரசியல்அமைப்பு உத்திரவாதமளித்துள்ள குடியரசுத் தத்துவதிற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரானது. அரசியல்அமைப்புச் சட்டம் ஓவ்வொரு குடிமகனுக்கும், மதச்சமத்துவம், பாதுகாப்பு மற்றும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் எனற உத்திரவாதத்தை உறுதியளிக்கிறது. இந்த உறுதியே நம் குடியரசு மற்றும் மதச்சார்பின்மைத் தத்துவதிற்கு அடித்தளமாக இருந்து அரசியல் சாசனத்தில் முக்கிய இடம் வகிக்கிறது
 6. மேலும், இத்தகைய இந்து விரோத நிலை தேர்தல் முறைகேடுகளுக்கும், மதவாத போக்கிற்கும் வழி வகுக்கிறது. இந்திய ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவித்துள்ளது. இந்து மதத்தின் பிரிவினர், தாம் இந்து அல்லர் அல்லது சிறுபான்மையினர் எனஅறிவித்து, இந்து மதத்தில் மறுக்கப்பட்டுள்ள சலுகைகளைப் பெற முனைந்து விட்டனர். இராமகிருஷ்ண மடத்தின் கோரிக்கையையும், லிங்காயத்துகளின் சமீபத்தைய கோரிக்கையையும் இப்போக்கிற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்து மதத்தை ஒழித்தே தீருவது என்று பல நூற்றாண்டுகளாக மூர்க்கமாய் முயற்சி செய்த முகலாய, வெள்ளைய ஆட்சியாளர்களாலும் அழிக்க முடியாத இந்து மதத்தினை, சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் அழித்து, சிதைத்து, சின்னாபின்னப் படுத்தி ஆட்டம் காண வைத்து விடுவார்களோ என்ற அச்சம் இந்துக்களிடையே  எழுந்துள்ளது. அவர்களை பதற்றமடையச் செய்துள்ளது.
 7. அரசுக்கள் இந்து விரோதி என்பது வெளிப்படை. இதனால் இந்துக்கள் தாம் பெரும்பான்மையாக இருந்தும்,  எதேச்சதிகார அந்நிய ஆட்சியாளர்களிடம் நூற்றாண்டுகளாய் அனுபவித்த அதே துயரங்களை, ஒருபடி மேலே போய் மீளா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அரசுகள் இவற்றைக் களைய முற்படாமல்,  இந்துக்களின்  கோரிக்கைகளை எவ்வளவு நியாயமாக இருந்தும் அலட்சியப் படுத்துகின்றனர். அவர்களை கீழ்மைப் படுத்துகின்றனர்.  இதனால் சனாதன தர்மம் சார்ந்த இந்து மதம் தன்னைக் காக்க முடியாத நிலைக்கும், புதிப்பித்துக் கொள்ள முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறது. இன்றைய இந்து சமுதாயத்தின் ஆன்மீக தேடலுக்கும், பிரச்சினைகளுக்கும் ஏற்ப தன்னை முறைப்படுத்த இயலாத நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறது.
 8. இந்திய நாகரீகம் பற்றி ஒரு தகவல் உண்டு: “இந்தியாவின் உயிர் மூச்சு இந்து மதக் கலாச்சாரமே. இந்தியாவை காக்க வேண்டுமானால் இக்கலாச்சாரத்தை பேண வேண்டியது அவசியம். இந்து கலாச்சாரமும், இந்துக்களும் இந்தியாவிலேயே அழிவுற்றால், இந்தியா வெறும் பூகோள அமைப்பாகவே இருக்க முடியும். ஒரு நாடாக இருக்காது”.
 9. இந்திய அரசுகள் நம் மகோன்னத நாகரீகத்தின் வாரிசுகள். வாரிசுகள் மட்டுமின்றி அதன் பாதுகாவலர்களும் கூட. இந்நாகரீகத்தைக் காத்து நம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வது அரசுகளின் கடமை. ஆனால் இவ்வரசுகள், நாம் பெரும்பான்மையினராக இருந்தும் நமக்கு எதிரான நிலைப்பாடுகளையே எடுக்கின்றன. இதனால் நம் மதம், கலாச்சாரம், நாகரீகம் மற்றும் பாரம்பரிய அமைப்புகள் மீளமுடியாமல் சிதைந்து கிடக்கின்றன.
 10. நமது சனாதன தர்மம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இதுவே நம் நாகரீகம் மற்றும் பண்பாட்டின் ஊற்றுக்கண். ஓரு இந்து “ஒன்றே குலம். ஓருவனே தேவன்” என்ற கொள்கையை பன்னெடுங்காலமாய் போற்றி அதன்படி நடப்பவன். அதில் பெருமிதமும் கொள்பவன். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்துமத சீர்கேடுகளைக் களைய இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்திர தீர்வுக்கு வழி செய்யாவிட்டால், பண்பாட்டின் சிகரமான இந்துமதம் அழியும் காலம் வெகுதொலைவில் இல்லை. இந்திய அரசு நம் கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் கருத்தில் கொண்டு, ஏற்ற கொள்கைகளையும், சட்டங்களையும் உடனடியாக இயற்ற வேண்டும். இதுவே அழிவுபடும் இந்து பண்பாட்டையும், நாகரீகத்தையும் புதுப்பித்து மறுமலர்ச்சி அடைய செய்யும்.
 11. இதன்படி, கீழ்க்கையொப்பமிட்ட நாங்கள், ஆழ்ந்த கவனத்துடனும், ஒத்தக்கருத்துடனும், இந்திய அரசுக்கு கீழ்க் காணும் கோரிக்கைகளை வைக்கின்றோம். இக்கோரிக்கைகள் எங்கள் முன்மொழிதலோடு பெரும்பான்மையான இந்துக்களின் ஆதரவையும் பெற்றது.

Leave a Reply